திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் அஞ்சலி நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி சசிரேகா(வயது 34). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சசிரேகா வீட்டில் உள்ள படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.