அரசுப்பள்ளி மாணவி கின்னஸ் சாதனை முயற்சி
திருச்சி, ஜன.4 மணப்பாறை அருகே 10 வயது சிறுமி 59 வினாடிகளில் 32 வகையான மேஜிக் செய்து கின்னஸ் சாதனை முயற்சி.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகள் 10 வயதான இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மேஜிக் கலைஞர் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே சிறுமிக்கு மேஜிக் கலை மீது அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு வகையான மேஜிக் செய்து வருகிறார். இந்நிலையில் இளம் வயதிலேயே கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்ததில் 59 வினாடிகளில் 32 வகையான மேஜிக் செய்து அதை கின்னஸ் முயசிக்கு அனுப்பி உள்ளார். மேலும் குறைந்த நேரத்தில் அதிக மேஜிக் செய்யும் முயற்சியில் சிறுமி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சிறுமியை பள்ளி ஆசிரியர் மற்றும் சக மாணவர்களும் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.