3 மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய திருச்சி எம்பவர் டிரஸ்ட்!

0 598
Stalin trichy visit

திருச்சி எம்பவர் டிரஸ்ட் மற்றும் மகேந்திரா ஹோம் ஃபைனான்ஸ் இணைந்து சேலம், மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 1250 மரக்கன்றுகளை நட்டு விழா கொண்டாடியுள்ளனர். குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் புங்கவாடி கிராமத்தில் ஏரிக்கரையில் 500 மரக்கன்றுகளும், அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகளும் கிராம பகுதியில் 50 மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா கல்லூரியில் 250 மூலிகை மரக்கன்றுகளும் மற்றும் செடிகளும் நடப்பட்டது.

இறுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா பூசாரிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்வில் வேம்பு, புங்கை, அத்தி, பலா, மகிழம், ஆலமரம், மாசாணி, சவுக்கு இலுப்பை மற்றும் பழ மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பண்ணை அமைக்க மூலிகைச் செடிகளை துளசி, ஓமம், தூதுவளை உள்ளிட்ட பல்வேறு மூலிகைச் செடிகளையும் மூன்று மாவட்டங்களில் நட்டு உள்ளனர்.

இந்நிகழ்வுகளில் எம்பவர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் கனிமொழி, மகேந்திரா ஃபைனான்ஸ் மனிதவள மேலாளர் ஜெயவேவ், மற்றும் மகேந்திரா ஹோம் ஃபைனான்ஸ் மனிதவள மேலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேலும் இந்நிகழ்வில் அந்தந்த மாவட்டங்களில் பஞ்சாயத்து தலைவர்கள், தலைமை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மகேந்திரா ஹோம் ஃபைனான்ஸ் மேலாளர், கிளை மேலாளர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.