கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துதொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு ஆர்ப்பாட்டம்

0 258
Stalin trichy visit

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. பெட்ரோல்-டீசல் விலை குறைப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துதொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் போக்குவரத்துக்கழக பணிமனை கண்டோன்மெண்ட் புறநகர் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. கிளை செயலாளர் கல்யாணகுமார் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. கிளை செயலாளர் அய்யப்பன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.