வாழ்வாதாரத்தை காக்க கோரி ஓட்டுநர் சங்கத்தினர் மனு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கொரோனா பேரிடர் காரணத்தால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும், அனைத்து ஓட்டுநர்களுக்கும் நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறியும், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று கூறியும், தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.