மணப்பாறை மகளிர் காவல்நிலையம் செல்லும் பாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்
திருச்சி, மே 6 திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையம் வளாக பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கருவூலம் , வட்டாட்சியர் அலுவலகம், கிளை சிறைச்சாலை அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவகத்திற்கு வருகை தரும் மக்கள் காவல் நிலைய முகப்பு வழியாகவும், வட்டாட்சியர் அலுவலக முகப்பு வாயில் வழியாக வந்து செல்கின்றனர்.
அப்படி வந்து செல்லும் மக்கள் காவல் நிலைய முகப்பு வாசலில் காவல் துறையினர் விபத்து ஏற்பட்ட நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை வளாக பகுதியில் நிறுத்தியும் மேலும் ஏதோ காவல் நிலையம் மட்டுமே செயல்படுவது போல் காவல் நிலையம் முன்பு மூன்று பகுதிகளிலும் செயின் அமைத்து எந்த வாகனமும் மற்ற அலுவலகம் செல்ல முடியாத அளவிற்கு விபத்து ஏற்பட்ட வாகனங்கள நிறுத்தி பொதுமக்களுக்கும் அரசு சார்ந்த அலுவலகத்திற்கு செல்லும் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் மக்கள் அரசு அலுவலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் மணப்பாறை துவரங்குறிச்சி வளநாடு புத்தாநத்தம் வையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் காவல் நிலையம் வர வேண்டும் என்றால் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தான் வர வேண்டும் அப்படி உள்ள சூழலில் காவல் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் காவல் நிலையம் சிறிய காவல் நிலையமாக செயல்படுவதால் மூன்று அல்லது நான்கு புகார்தாரர்கள் வந்தால் நிற்கக்கூட இடம் இல்லாத நிலையில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் விபத்து மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் அவர்களிடமிருந்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறையினர் அந்த வாகனங்களை அனைத்து மகளிர் காவல் நிலையம் செல்லும் பாதையில் வழி நெடுகிலும் நிறுத்தி வைத்திருப்பதால் புகார் தாரர்கள் காவல் நிலையம் சென்று வர மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக காவல் நிலைய வளாகப் பகுதியை ஆய்வு செய்து பொதுமக்கள் சிரமமின்றி காவல் நிலையம் சென்று வர மற்ற அலுவலகங்களுக்கு சென்று வர இடையூறாக இருந்து வரும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் பொதுநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.