முதலமைச்சர் திருச்சி வருகை : ட்ரோன்கள் பறக்க தடை
திருச்சி, மே 6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி மே 8, 9 இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி மே 8, 9 அன்று நள்ளிரவு 12 மணி வரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.