மாவீரன் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
இந்திய நாட்டின் விடுதலைப்போரில் தன் இன்னுயிரை நீத்த மாவீரன் பகத்சிங்கின் 114வது பிறந்தநாளை யொட்டி திருவெறும்பூர் பஸ் நிலையத்தில் திருச்சி மாநகர் DYFl காட்டுப்பகுதிக்குழு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பகுதித் தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். பகுதி துணைத் தலைவர் சந்தோஷ் கலந்து கொண்டு கொடியேற்றினார். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், பகுதி நிர்வாகிகள் நிவேதா, சுபாஷ், ஹரி, பாபுஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.