மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தமிழக பா,ஜ.க.துணை நிற்கும் – அண்ணாமலை

0 810
Stalin trichy visit

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைநாளை மதியம் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் அவர் கரூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் திருச்சி அண்ணா சிலை அருகே அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருந்தது.அப்போது பாஜகவினர் அவரை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடிக்க போலீசார் அனுமதி மறுத்ததால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆயினும் பாஜகவினர் பட்டாசு வெடித்தனர்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை…”மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு தமிழக பாஜக எப்போதும் உறுதுனையாக இருக்கும். முன்னாள் பாஜக தமிழக தலைவர் முருகன் கொங்கு மண்டலத்தில் சேர்ந்தவர் என்பதால் கொங்குநாடு என குறிப்பிட்டார்.ஆனால் ஊடகங்கள் அதனை பெரிது படுத்துகின்றன.பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் அல்ல, இஸ்லாமியர்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து அரசியல் செய்பவர்கள் தான் பொது சிவில் சட்டம் இஸ்லாம் எதிரானது என்ற கருத்தை பரப்புகின்றனர்.

 

தமிழகத்திற்கு தேவையான அளவிற்கு அதிகமாகவே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது
70 சதவீத தடுப்பூசியை திமுகவினரை பெற்று கட்சியினருக்கு செலுத்துகின்றனர். இதன் காரணமாக
30 சதவீத தடுப்பூசி மட்டுமே பொது மக்களை சென்றடைகிறது,ஆயினும் திமுகவினர் இதனை மறைத்து பற்றாக்குறை என குறை கூறுகின்றனர்” என குற்றம் சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.