திருச்சி வழக்கறிஞர் கொலை வழக்கு – 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

0 947
Stalin trichy visit

திருச்சி பீமநகர் பகுதியில் கடந்த மே மாதம் 9ம் தேதி கோபி கண்ணன் என்ற வழக்கறிஞர் அடையாளம் தெரியாத 5 நபர்களால் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பாலக்கரையில் சேர்ந்த பிரேதேஷ் பிரசாந்த், கோயம்புத்தூரைச் சேர்ந்த சுரேஷ், திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த உதயகுமார், சித்திக் மற்றும் சஞ்சய் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
மேலும் குற்றவாளிகள் குற்றம் செய்யக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வந்ததால் 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ள கன்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சித்திக் மற்றும் சஞ்சய் ஆகிய இரண்டு சிறுவர்கள் திருச்சி இளைஞர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.