திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் மகன் மணிகண்டன்(24). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பெல் நகர் பகுதி பாலகணபதி கோவில் குருக்கள் உதவியாளராக இருந்து வருகிறார்.

இவர் நேற்று காலை குளிக்க மின்மோட்டாரை இயக்கி விட்டு குடியிருப்புக்கு பின்புறம் சென்று அங்கிருந்த மின் கம்பி வேலியை தொட்டபோது அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் துவாக்குடி சடலத்தை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.