திருச்சி ஜான் தோப்பு ஏகாம்பரம் பிள்ளை ஸ்டோரை சேர்ந்தவர் சரவணன் மகன் ஜெகதீஸ்வரன்(வயது 19). இவர் துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில் மெயின்கார்டு கேட் பஸ் நிறுத்தத்தில் அவர் நின்று கொண்டிருந்த பொழுது, குடிபோதையில் வந்த மர்ம நபர்கள் இருவரிடம் வீண் வம்பு செய்து தகராறில் ஈடுபட்டு, கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த கல்லூரி மாணவர் ஜெகதீஸ்வரன் திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள ஜீவிஎன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.