“சத்துணவு திட்டத்திற்கு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும்” – திருச்சியில் 13வது மாவட்ட மாநாட்டில் தீர்மானம்!

0 626
Stalin trichy visit

சத்துணவுத் திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 13வது மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 13வது மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் சத்தியவாணி தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சுந்தராம்பாள் கலந்து கொண்டார். இதில் தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு 10 லட்ச ரூபாயும், சமையலர் மற்றும் உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்.

சத்துணவுத் திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு பென்சன் ரூபாய் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்டஇருபத்திநான்கு கோரிக்கை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

 

இந்த மாநாட்டில், மாநிலச் செயலாளர்கள் சக்தி, பெரியசாமி மாவட்ட செயலாளர் கே எம் ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.