பணியின் போது உயிர்நீத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி!

0 372
Stalin trichy visit

பணியின் போது உயிர்நீத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள மேலாளர் அலுவலகம் முன்பு பணியில் இருக்கும் போது உயிர்நீத்த ரயில்வே பாதுகாப்பு காவலர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையின் திருச்சி கோட்ட முதுநிலை ஆணையர் இராமகிருஷ்ணன்,திருச்சி கோட்ட உதவி ஆணையர் சின்னத்துரை, ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.