சேறும், சகதியுமான சாலையில் அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி ஆய்வு

0 339
Stalin trichy visit

திருவெறும்பூர் தொகுதி காட்டூர் பகுதி, ஆலத்தூர், மலைக்கோயில், திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை 61 முதல் 65 வார்டுகளாக, திருச்சி மாநகராட்சி தனது எல்லையை விரிவாக்கம் செய்தது. இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் திருச்சி மாநகராட்சி பாதாள வடிகால் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டது.

இதனால் கைலாஷ்நகர், பாலாஜிநகர், பிரகாஷ்நகர் உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் சூழ்ந்த நகர்களின் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி சேறும் சகதியுமாக உள்ளது. இதனை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி ஆய்வு செய்து மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

Leave A Reply

Your email address will not be published.