நரசிங்கபுரம் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

0 591
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள நரசிங்கபுரம் ஊராட்சியில் பிரசாந்த்(வயது 32) என்பவர் 2019ம் ஆண்டு நரசிங்கபுரம் ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் ஊராட்சிக்கு சேர வேண்டிய வீட்டுவரி குடிநீர் கட்டணம் மற்றும் பல வருவாய் கீழ் பொது மக்களிடமிருந்து வசூலித்த தொகையை லட்சக்கணக்கில் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை விசாரணையில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.