எய்ர்‌ எட்‌ ஆக்சன் தொண்டு நிறுவனம் சார்பில் திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

0 376
Stalin trichy visit

எய்ர்‌ எட்‌ ஆக்சன் தொண்டு நிறுவனம் சார்பில் திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தினர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் எய்ட் எட் ஆக்சன் தொண்டு நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பொன்மலை கணேசப்புரத்தில் உள்ள அங்கன்வாடியில் இன்று நடைபெற்றது.

இந்நிகச்சியை மருத்துவர் இந்துமதி துவக்கி வைத்து கொரோனா தடுப்பூசி முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். பின்னர் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது மற்றும் சர்வதேச பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எய்ட் எட் ஆக்சன் சார்பில் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளை மருத்துவர் இந்துமதி அவர்கள் வெளியிட்டார்.இறுதியாக திட்ட ஒருங்கிணைப்பாளர் சூர்யா கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்ப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.