டாஸ்மாக் கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக பார் நடந்தது கண்டுபிடிப்பு

0 279
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 10 டாஸ்மாக் கடைகள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், வசந்தன், பொன்ராஜ், இப்ராஹிம், பாண்டி, ஜஸ்டின் மற்றும் வடிவேல் கொண்ட குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது சில கடைகளில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படாமலும், 2 கடைகளில் குளிர்சாதன பெட்டி சரிவர வேலை செய்யாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 2 டாஸ்மாக் கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக பார் நடைபெற்றது கண்டறியப்பட்டு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு மாவட்ட கலெக்டரின் மேல்நடவடிக்கை எடுப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளில் ரம், பிராந்தி மற்றும் விஸ்கி போன்றவைகளில் 4 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.