திருச்சி அரியமங்கலம் அருகே கீழ அம்பிகாபுரம் லூயிஸ் நகர் பகுதியில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. அதில் காஞ்சனா(வயது 20) என்ற பெண் கடந்த 12 வருடமாக அங்கு தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி அங்கிருந்து வெளியே சென்றவர் இதுவரை காப்பகத்துக்கு வரவில்லை என காப்பகத்தின் நிர்வாகி வில்லியன் மேரி என்பவர் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மாயமான காஞ்சனாவை தேடி வருகின்றனர்.