காதலியுடன் பேசிக்கொண்டிருந்தவருக்கு கத்திக்குத்து; 4 பேர் மீது வழக்குப்பதிவு

0 419
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் ரங்ககுமார்(வயது 22). சம்பவத்தன்று தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் இருதயபுரம் வந்த இவர், காதலியுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த காந்திமார்க்கெட் பிள்ளைமாநகர் பகுதியை சேர்ந்த அஜித்கிளிண்டன்(24), பாலக்கரையை சேர்ந்த விமல்(22), ஹரிகரன்(19), தாமஸ் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரங்ககுமாரை அவர்கள் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு ரங்ககுமாரின் நண்பர் மற்றும் 2 பேர் அஜித்கிளிண்டனை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் அஜித்கிளிண்டன், விமல், ஹரிகரன், தாமஸ் ஆகியோர் மீது பாலக்கரை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.