திருச்சி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

0 385
Stalin trichy visit

மின்வாரியம் உள்பட பொதுத்துறை தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசாமல் தமிழக அரசு தன்னிச்சையாக ரூ.8,400 போனஸ் என்று அறிவித்ததை கண்டித்தும், 20 சதவீத போனஸ் வழங்க கோரியும் தமிழ்நாடு மின்வாரிய கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தென்னூரில் உள்ள திருச்சி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.