சாலையை கடக்க முயன்ற இளம்பெண் பெட்ரோல் டேங்கர் லாரி மோதி பலி

0 390
Stalin trichy visit

 

திருவெறும்பூர் அருகே உள்ள உரத்தூரை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 30). இவர் திருவெறும்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மாலை வீட்டுக்கு செல்வதற்கு திருவெறும்பூர் பகுதி கடைவீதியில் காய்கறி வாங்கிக் கொண்டு திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

 

அப்போது துவாக்குடி பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த பெட்ரோல் டேங்க் லாரி ராஜலட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜலட்சுமியை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜலட்சுமி சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.