திருவெறும்பூர் அருகே ஆற்றில் மிதந்த ஆண் பிணம் – போலீஸார் விசாரணை!
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையங்குறிச்சி ஊராட்சி காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசார் மற்றும் கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது தகவலின் அடிப்படையில் சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியாமல் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் அவர் ? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு ஆற்றில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.