திருச்சி தெற்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நிர்வாகிகளுக்கு, மாவட்ட கழக பொறுப்பாளரும், அமைச்சருமான, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
01-01-2022 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 1 -11- 2011 அன்று வெளியிட்டுள்ளது.
1-11- 2021 முதல் 30- 11-2021 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர (13-11-2021 சனிக்கிழமை) (14-11-2021 ஞாயிற்றுக்கிழமை) (27-11-2021 சனிக்கிழமை) மற்றும் (28-11-2021 ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களுக்கும், இடம் மாறிய வாக்காளர்களுக்கும் 01-01-2022 அன்று 18 வயது நிரம்பக்குடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை, சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்வதற்கு படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அந்த படிவங்களை அந்தந்த முகாமில் கொடுக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்துள்ள வாக்காளர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மேற்கண்ட அட்டவணைப்படி, சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்,ஊர் கிளை, வார்டு, வட்டகழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் (BLA – 2) ஆகிய தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.