திருச்சி மாவட்டத்தில் ரூ.16.86 கோடிக்கு மதுப்பாட்டில்கள் விற்பனை

0 389
Stalin trichy visit

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும். கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக மதுவிற்பனை குறைந்தது.
ஆனால், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது. அத்துடன் கடந்த 1-ந் தேதி முதல் டாஸ்மாக் பார்களும் திறக்கப்பட்டன. குறிப்பாக தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்பு அனைத்து பார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானங்களை அதிகளவு விற்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் அதிகாரிகள் செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதுமான அளவு மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் மதுப்பாட்டில்கள் விற்பனைக்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதையொட்டி, அனைத்து வகையான மதுபானங்களும் டாஸ்மாக் கடைகளில் குவிக்கப்பட்டு இருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி பண்டிகையன்றும் அதிகளவு விற்பனைஆனது.
அதன்படி, இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளியன்றும் டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மதுவிற்பனை ஆகி உள்ளது. திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3-ந் தேதி ரூ.45.29 கோடியும், 4-ந் தேதி ரூ.49.57 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் தீபாவளி பண்டிகையையொட்டி 3-ந் தேதி ரூ.8.40 கோடிக்கும், 4-ந் தேதி (தீபாவளியன்று) ரூ.8.46 கோடிக்கும் என 2 நாட்களில் ரூ.16 கோடியே 86 லட்சத்துக்கு மதுப்பாட்டில்கள் விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.