வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் கொள்ளை

0 288
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சமயபுரம் சாலையில் வசித்து வருபவர் கோபால்(வயது 64). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும், இவரது மனைவி வசந்தியும்(60) கடந்த 27-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு திண்டுக்கல்லில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி வீட்டிற்கு வந்த அவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமார் 15 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கோபால் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது அது சிறிது தூரம் சென்று நின்று விட்டது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை மேலும் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர்.

மேலும், இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தீபாவளியன்று பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு மர்ம நபர்கள் சிலர் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.