மழையால் பாதிக்கப்பட்ட கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்க வலியுறுத்தல்
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மண்டல மாநாடு உறையூரில் நேற்து நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி தொடங்கி வைத்தார். மாநாட்டை வாழ்த்தி பழனியாண்டி எம்.எல்.ஏ. பேசினார். மாநில பொதுச்செயலாளர் ரவி மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கட்டுமானத் தொழிலாளி பாதிக்கப்பட்டால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கவும், அதன் செலவையும் வாரியம் ஏற்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.