ஆக்கிரமிப்பில் இருந்த 3 கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திய நெடுஞ்சாலைதுறை

0 482
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த ஆத்துப்பட்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 2 வீடுகள் மற்றும் ஒரு கடை கட்டி வைத்துள்ளனர். அந்த கட்டிடங்கள் பயன்பாட்டிலும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நெடுஞ்சாலைதுறையினர் ஆக்கிரமிப்பில் இருந்த 3 கட்டிடங்களையும் ஜேசிபி மூலம் இடித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.