கோவையில் பாலியல் தொல்லைக்கு பலியான மாணவிக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0 331
Stalin trichy visit

கோவையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் தற்கொலை சம்பவத்துக்கு நீதி விசாரணைக்கோரி பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாணவி தற்கொலையில் நீதி விசாரணைக்கோரியும், இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பாலியல் சம்பவங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு கே.கே.நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.