அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
திருச்சி மாவட்டம் கோப்பு கிராமம் கீழத் தெரு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி வசந்தா. இவர் பழம் வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இருள் சூழ்ந்த பகுதியில் மின்கம்பிகள் அறுந்து கிடந்ததை மித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்துபோன குடும்ப வாரிசுக்கு மின்சார வாரியத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கோப்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இறந்து போன குடும்ப வாரிசுதாரர்களிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இதில் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் சிவலிங்கம், உதவி செயற்பொறியாளர் கலைவாணன், உதவி பொறியாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.