தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர்குழுவில் இடம் பெற்ற ஆஷாதேவி

0 1,391
Stalin trichy visit

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட இடைவெளியை சரிசெய்யும் வகையில், அந்த மாணவர்களுக்கு அடிப்படை கல்வி மற்றும் கணித அறிவை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்ட 8 பேர் நிபுணர்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த குழுவில் திருச்சி பிராட்டியூர் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியையும், சமீபத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ஆஷாதேவி இடம் பெற்றுள்ளார். இந்தகுழு இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, புத்தாக்க முறையில் மாணவர்களுக்கு எவ்வாறு கற்றுத்தருவது என்பது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.