பன்றியை துப்பாக்கியால் சுட்ட 4 பேர் மீது வழக்கு!

0 571
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள முத்து நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 56). இவரது வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை ராஜேந்திரன் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு பக்கத்து இடத்து காரர் லட்சுமி(வயது 40). இவரது மகன்கள் சரவணன்(வயது 22), திவாகர்(வயது 20) ஆகியோர் ராஜேந்திரனிடம் நீங்கள் வளர்க்கும் பன்றிகள் எங்களது இடத்தில் வந்து அசுத்தம் செய்வதாகவும், எங்களது இடத்தில் பன்றிகள் வரக்கூடாது என்று ராஜேந்திரன் இடம்கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழை பெய்து வருவதால் பன்றிகள் லட்சுமி என்பவரது இடத்தில் அசுத்தம் செய்து படுத்து இருந்து உள்ளது.

இதையடுத்து ஆத்திரமடைந்த லட்சுமியின் உறவினரான உலகநாதன் (வயது 20) என்பவர் தன்னிடமிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ராஜேந்திரனின் பன்றி ஒன்றை சுட்டுள்ளார் இதில் பன்றி சம்பவ இடத்திலேயே இறந்தது. திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் உடனடியாக அந்த பகுதி பொதுமக்கள் துறையூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள் தகவல் அறிந்த துறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள் போலீசார் வருவதை அறிந்த உலகநாதன் தாம் வைத்திருந்த துப்பாக்கியுடன் தலைமறைவானார்.

இதையடுத்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சரவணன்(வயது 22), திவாகர்(வயது 20), லட்சுமி(வயது 40), பாலாஜி(வயது 39) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள் தலைமறைவான உலகநாதன் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். திடீரென்று நாட்டு துப்பாக்கி கொண்டு பன்றியை சுட்டதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.