திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம் அழிஞ்சகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தி (வயது 50). கணவா் இறந்து விட்ட நிலையில் தாயுடன் வசித்த இவா் வாரி பாலத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மண்ணச்சநல்லூா் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் அவரின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.