நகர்ப்புற- உள்ளாட்சி தேர்தல்;  திருச்சி தெற்கு மாவட்டத்தில் விருப்ப மனு!

0 373
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது;-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வருகின்ற 24-11-2021 முதல் 30-11-2021 வரை காலை 10 மணி முதல் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.என்.நகர், திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது. போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் விண்ணப்ப படிவத்தை ரூ.10 மட்டும் செலுத்தி மாவட்ட அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழே குறிப்பிட்டுள்ள கட்டணத்துடன் மாவட்ட அலுவலகத்தில் 30-11-2021 அன்று மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கட்டண விபரம்
மாமன்ற உறுப்பினர்-ரூ.10,000
நகர்மன்ற உறுப்பினர் ரூ.5000
பேரூராட்சி உறுப்பினர் ரூ.2500

குறிப்பு:-
ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் போட்டியிடுவோர் மேற்படி கட்டணத்தில் பாதித் தொகையை மட்டும் செலுத்த வேண்டும்,போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தாங்களே நேரில் வந்து மனுவைப் பெற்றுக் கொள்ளவும், நேரில் பெற்று கொள்ளும் மனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.