திருச்சி எடத்தெரு பிள்ளை மாநகரை சேர்ந்தவர் சுதாகர்(வயது 42). தொழிலாளியான இவர், அரியமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதேநேரம், திருச்சி வடக்குகாட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியை சேர்ந்த அஜீத்குமார்(வயது 21), பாகவதர் வீதியை சேர்ந்த ஆசாத்அலி(வயது 21) ஆகியோர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
அவர்கள் சுதாகரின் வாகனத்தை இடிப்பது போல் முந்திச்செல்ல முயன்றதால், அதுபற்றி அவர் கேட்டதால், அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியால் சுதாகரின் முகத்தில் கிழித்ததுடன், அவரை கைகளால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு சயெ்து அஜீத்குமார், ஆசாத்அலி ஆகியோரை கைது செய்தார்.