முரசொலி மாறனின் நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் மரியாதை

0 303
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய மறைந்த முரசொலி மாறனின் நினைவுநாளை முன்னிட்டு தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாநில நிர்வாகிகள் அரங்கநாதன், செந்தில், பகுதி செயலாளர் மதிவாணன், தினகரன் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், பொது குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.