விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; 3ந் தேதி நடக்கிறது

0 492
Stalin trichy visit

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 3-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டமன்றத்தில் கலெக்டர் சிவராசு தலைமையில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.