துறையூரில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் -வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு
துறையூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் 31ந்தேதி நடைபெறுகிறது. நிர்வாகிகள் பங்கேற்க வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் அழைப்பு.
திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் வரும் 31. 10.2022 அன்று திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் துறையூர் ஏவிஎஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட அமைத்தலைவர் அம்பிகாபதி தலைமையிலும், கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் .நேரு முன்னிலையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்ட, அனைத்து, ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறும் அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 4.11 22 தேதி திருச்சியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச் சாலை மையங்களுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், கழக ஆக்கப் பணிகள் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.