இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு : மோதல் – கத்திக்குத்து

0 323
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது வெடி வெடித்த போது ஏற்பட்ட மோதலில் இரண்டு பேருக்கு கத்திவெட்டு. 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகன்கள் 36 வயதான பாலு,32 வயதான கார்த்தி. பிரியாணி கடை நடத்தி வரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான காமராஜ்.இந்நிலையில் காமராஜ் என்பவரின் அப்பா ரங்கராஜ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது இறுதி ஊர்வத்தின் போது லாலா மணிகண்டன் காயம்பட்ட பாலுவின் வீட்டின் முன்பு அதிகமான சத்தம் பேப்பர் வரக் கூடிய வெடியை வெடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த லாலாமணி என்கின்ற மணிகண்டனை பாலு மற்றும் கார்த்திக்ஆகிய இருவரும் இது குறித்து கல்லக்குடி பேருந்து நிலையத்தில் வைத்து கேட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து லாலா என்கின்ற மணிகண்டன் காமராஜிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சேகர், கவியரசன், மணிகண்டன், பிரேம் குமார், கிருஷ்ணவேணி, விஜயா, ஹேமலதா, ஆகுயோர் கார்த்திகேயனையும் மற்றும் பாலசுப்பிரமணியத்தையும் சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படு காயமடைந்த இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜ், கிருஷ்ணவேணி சேகர், பிரேம்குமார், விஜயா, மணிகண்டன், கவி, ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.

இச்சம்பம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், லால்குடி டிஎஸ்பி சீதாராமன் லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் காமராஜ் பிரியாணி கடையை யாரோ மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி சூறையாடிதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.