காவிரி ஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

0 447
Stalin trichy visit

திருச்சி உறையூர் திருத்தாந்தோணி சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 50). இவர் ஸ்ரீரங்கம் கீதாபுரம் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.