கணவனிடம் தகராறு மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி உய்யகொண்டான் திருமலை சீனிவாசாநகரை சேர்ந்த சம்பத்-உமா தம்பதிகளின் மகள் சவிதாபிரீத்தி(வயது 21). இவர் ஆட்டோ டிரைவரான ராகவன் என்பவரை காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீப்திஸ்ரீ(4) என்ற ஒரு மகள் உள்ளார். தற்போது, இவர்கள் சண்முகாநகர் விரிவாக்க பகுதியில் வசித்து வந்தனர். சவிதாபிரீத்தி கருப்பை நீர்கட்டியால் அவதி அடைந்து வந்துள்ளார்.
மேலும் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பணப்பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இதுகுறித்து சவிதாபிரீத்தியின் தாயார் உமா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சவிதாபிரீத்திக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.