பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி
திருச்சி, ஜன.5 திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 6 வயது முதல் 12 வயது வரையுள்ள பள்ளி வட்டார வளமையம் சார்பில் பள்ளி செல்லா, இடைநிறை மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இக்கணக்கெடுப்பு பணியில் வட்டார வளமய்ய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வவர்கள் மற்றும் கிராம செவிலியர்கள் வீடாகச் சென்றும், கடைகள், குடிசை பகுதிகள் போன்ற இடங்களில் கணக்கெடுப்பில் ஈடுபட்டு செல்போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர். கணக்கெடுப்பு பணியின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று வட்டார மேற்பார்வையாளர் பழனிசாமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் அமுதா, ஜான் போஸ்கோ, சரவணக்குமார், வளர்மதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் பிரியதர்சினி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் முத்தமிழ்செல்வி, சிறப்பாசிரியர்கள் ரேணுகாதேவி, சேதுராமன், ஜான்சிராணி, இயன்முறை மருத்துவர் பைரவி, நடுப்பட்டி தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோர் கொண்ட குழுவினர் கட்டக்காம்பட்டி, கல்பட்டி குடியிருப்புகளில் உள்ள குடிசை பகுதிகளிலும் ஈடுபட்டனர். மலைப்பகுதிகளிலும் இணை சோதனையில் ஈடுபட்டனர்.