முசிறி அருகே 781 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காமாட்சி பட்டியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்கி விநாயகம், காவலர் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் காமாட்சி பட்டியில் உள்ள சேகர் என்பவரது வீட்டின் அருகே கண்டெய்னர் லாரியிலிருந்து, டாட்டா ஏசி வாகனத்தில் மூட்டைகள் மாற்றப்படுவது கண்டு சோதனை செய்ததில் அதில் லட்சக்கணக்கான மதிப்பு உள்ள 30க்கும் மேற்ப்பட்ட குட்கா பான் மசாலா மூட்டைகள் கொண்ட போதைப் பொருட்கள் மாற்றப்படுவதை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதனை அடுத்து விசாரணை செய்ததில் பூனாவிலிருந்து தஞ்சாவூருக்கு பைப் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரான தெற்கு தெரு விராலிமலை அழகர் மகன் வெள்ளைச்சாமி வயது 23, கிளினர் அசுரப்பட்டி விராலிமலை வேலு மகன் சீனிவாசன் வயது 25, ஆகிய இருவரும் நாமக்கல் அருகே வண்டி உரிமையாளருக்கு தெரியாமல் குட்கா பொருட்கள் தொடர்ந்து கடத்தி வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. கடத்தி வந்த குட்கா பொருட்களை காமாட்சி பட்டி அருகே டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டுநர் சூரம்பட்டி செல்லிபாளையம் சோழன் மகன் திவாகர் வயது 23 ஏற்ற சென்றுள்ளார். அங்கு மடக்கி பிடித்த முசிறி போலீசார் மூவரையும் கைது செய்து 781 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி விசாரணையில் பொருட்கள் கொடுத்த உரிமையாளர் யார் முசிறி அருகே காமாட்சி பட்டியில் பொருட்களை வாங்கி மொத்த வியாபாரம் செய்யும் குற்றவாளி யார் என விசாரணையில் தெரிய வரும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
