சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி பனையடியான் கோயில் பகுதியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.
அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இந்நிலையில் லால்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. அப்போது மேலவாளாடி பனையடியான் கோவில் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த 70 ஆண்டுகளுக்கு மேலான பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மரம் முறிந்து விழுந்ததில் மின் ஒயர்கள் அருந்ததால் மின்சாரம் தடைப்பட்டது
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறை தேனிப்புத்துறை மின்சார துறை போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் அங்கு சென்று பொக்லைன் எந்திரங்கள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்ட நேரத்தில் மாற்று வழியில் போலீசார் வாகனங்களை திருப்பி விட்டனர்