”வருகிற 2ம் தேதி” உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்!
திருச்சி மாவட்ட காவல்துறையிரனால் இந்திய குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 102 படி சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத 233 இருசக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 237 வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே வருகின்ற 02.05.2022 காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர் 01.05.2022ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 02.05.2022 காலை 7 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5000 முன் பணம் செலுத்தி
பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்கள்.