விபத்தில் மூளைச்சாவு; வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்!

0 282
Stalin trichy visit

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் சத்திய மூர்த்தி(வயது 28). இவர் சாலை விபத்தில் காயமடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவர் மூளை சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். துரிதமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் உடல் உறுப்பு தானம் பற்றி எடுத்துக்கூறி அதற்கு இளைஞரின் உறவினர்களின் ஒப்புதல் பெற்றனர்.

இதையடுத்து அந்த வாலிபரின் இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானமாக பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை டாக்டர் விஜய்கண்ணா, டீன் ரேவதி, டாக்டர சிவகுமார் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்தனர். மருத்துவமனை நிர்வாகம் இளைஞரின் உறவினர்கள், உதவிய காவல்துறை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.