கட்டிட வேலையின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
திருச்சி கருமண்டபம் மாந்தோப்பு 3வது தெருவை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 35). கட்டிட தொழிலாளி. கடந்த 20 ஆண்டுகளாக கருமண்டபத்தை சேர்ந்த இன்ஜினீயர் நாகராஜன் என்பவரிடம் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். உறையூர் ராமலிங்க நகர் அகமது காலனியில் இன்ஜினீயர் நாகராஜன், புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டிடத்தில் கடந்த 9ம் தேதி சசிகுமார் வேலை செய்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சசிகுமார் தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சசிகுமார் இறந்தார். இதுகுறித்து சசிகுமாரின் மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.