ஜூன் 1 முதல் நெகிழிப்பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை – திருச்சி மாநகராட்சி எச்சரிக்கை

0 457
Stalin trichy visit

வணிக நிறுவனங்களுக்கு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு.
ஜூன் 1ம் தேதி முதல் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்கள் 100% தவிர்க்க வேண்டும்’ என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், நெகிழிப்பொருட்கள் பயன்படுத்துவதை 100 சதவீதம் தடுக்கும் பொருட்டு மாற்று பொருட்கள் உபயோகபடுத்த வேண்டும் என்றும், வரும் 31.05.2022 தேதிக்குள் வியாபாரிகள் நெகிழிப்பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும் எனவும், மஞ்சபை, பேப்பர் கவர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், அறிவுரைகள் வழங்கப்பட்டது. வரும் 01.06.2022 தேதி முதல் நெகிழிப்பொருட்கள் (plastic) பயன்படுத்துவதை 100 சதவீதம் தவிர்க்க வேண்டும் என்றும் வணிகர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.