வேளாண் கல்லூரி மாணவிகள் கால்நடை முகாமில் பங்கேற்பு

0 253
Stalin trichy visit

திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் தங்களின் ஊரக வேளாண் பணி அனுபவத்திறகாக அயிலாபேட்டையில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையால் நடத்தப்பெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றனர்.

இந்த முகாமில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கான உதவி திட்டத்தின் மூலம் கோமாரி தடுப்பூசி, குடற்புழு நீக்குதல், செயற்கை கருவூட்டல் போன்ற சிகிச்சைகள் மருத்துவர் கணபதி பிரசாத் (உதவி இயக்குநர்), மருத்துவர் அன்பரசி மற்றும் மருத்துவர் சி.சுரேஷ்பாபு ஆகியோர்களால் அளிக்கப்பட்டன. இதில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.