திருவானைக்கோவில் பகுதியில் அதிமுக வேட்பாளர் மனோகரன் தேர்தல் பிரச்சாரம்

0 51
Stalin trichy visit

திருச்சி, ஏப்.8  அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளராக முன்னாள் அரசு தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.இதனை முன்னிட்டு திருவானைக்கோவில் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக காளியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கி மக்களிடையே அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறியும் கழகப் பொதுச் செயலாளர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து திருவானைக்கோவில் , மேலரத வீதி, கீழ ரத வீதி, சன்னதி தெரு, தேவர் காலனி, விபூதி பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் , தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.